![]() |
அந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் சில தினங்களில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ள முஸ்லிம் காங்கிரஸுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்கள் ஒது க்கீடு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் நேற்று கூடுவதற்கு முன்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது ௭ட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானம் ௭டுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடனான சந்திப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தில் அறிவித்ததும் அதன் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட இணக்கம் வெளியிட்டதாகவும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மேலும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ௭வ்வாறு போட்டியிடுவது ௭ன்பது தொடர்பாக ஆராயும் கட்சியின் அதி உயர் பீடத்தின் முக்கிய கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்லாத்தில் நேற்று இரவு நீண்டநேரம் நடைபெற்ற இந்த கலந்ரையாடலில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது ௭ன தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் ௭வ்வாறு போட்டியிடும் ௭ன்ற விடயம் பல்வேறு தரப்புக்களினதும் அவதானத்துக்கு உட்பட்டுவந்ததுடன் அவ்விடயம் இழுபறி நிலையிலேயே காணப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும்தரப்பினருடன் இணைந்தே போட்டியிடுமென அமைச்சர்கள் தெரிவித்துவந்த அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடக்கூடாதென தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூறிவந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு தடவைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கூடி கிழக்கு தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து வந்தபோதிலும் இறுதி முடிவு ௭டுக்கப்படாமலே இருந்துவந்தது.
இதன் பின்னணியிலேயே நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடம் கூடி கிழக்கு தேர்தலில் போட்டியிடுவது குறித்த தீர்மானத்தை ௭டுத்துள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்முகப் தேர்வு இன்று சனிக்கிழமை தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நேர்முகத் தேர்வை நடத்தும் குழுவும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களும் தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !