
நிரோமி டி சொய்சா என்பவர் எழுதியுள்ள 308 பக்கங்களைக் கொண்ட தமிழ் ரைகஸ் (Tamil Tigress) என்ற புத்தகத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக சில சம்பவங்களை இவர் விபரித்துள்ளார்.
உளவாளிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததுடன், தமிழ்வர்த்தக நிலையங்களில் களவாடினர் என நிரோமி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1987ம் ஆண்டு 17 வயதில் நியோமி டி சொய்சா புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். சொய்சா தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
வன்முறைகளின் மூலம் தமிழீழத்தை எட்ட முடியாது என அறிந்து கொண்டதன் பின்னர் தாம் இயக்கத்தை விட்டு விலகியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய படையினருக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக விடுதலைப் புலிகளின் இளம் உறுப்பினர் ஒருவரை சிரேஸ்ட உறுப்பினர்கள் சித்திரவதை செய்ததனை தாம் நேரில் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கரப்பான் பூச்சியை கொல்வது போன்று குறித்த இளைஞரை புலிகள் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
சக பெண் போராளிகளை காதலித்த இளைஞர் ஒருவரையும் புலிகள் சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படையினருடனான யுத்தத்தை நிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததாகவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !