மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் உள்ள வாவியில் இருந்து இன்று (05) இரவு பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வாவியில் இருந்து மீனவர்களின் உதவியுடன் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு - ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த லக்ஷ்மி (52வயது) என்பவரது என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கணவரிடம் இருந்து விவாகரத்துப்பெற்று தனிமையில் வசித்துவந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !