![]() |
தற்போதைய ஆய்வுகளின் படி ஈரான் தனது நாளாந்த எண்ணெய் உற்பத்தியை 2.8 மில்லியன் பெரல்களில் இருந்து 1 மில்லியன் பெரல்களாகக் குறைத்துள்ளது.
எனினும் எண்ணெய் உற்பத்தியை அதிகமாகக் குறைக்கும் செயற்பாடானது அதன் எண்ணெய்க் கிணறுகளில் சேதத்தை ஏற்படுத்துமென ஈரான் அஞ்சுகின்றது.
இதனால் மிகுதியான சுமார் 40 மில்லியன் பெரல் எண்ணெயினை ஈரான் கப்பல்களில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தனது எண்ணெயை விற்பனை செய்துகொள்ள ஈரான் தீவிரமாக முயன்று வருவதாகவும் தெரியவருகின்றது.
ஈரானிடம் எண்ணெய் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது.
இதனால் ஈரான் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான நட்டத்தினை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மீதான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் அதன் பொருளாதாரத்தில் தற்போது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு உலக நாடுகள் ஈரானிடமிருந்தான தமது எண்ணெய்க் கொள்வனவினை நிறுத்தியுள்ளன.
அண்மையில் கென்யா ஈரானிடமிருந்தான தினசரி 80,000 பெரல்கள் எண்ணெய் ஒப்பந்தத்தினை இரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !