
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 13 இடங்களை வழங்க முன்னணி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உள்ளிட்ட 7 பேர் போட்டியிட உள்ளதுடன் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா மூன்று பேர் போட்டியிட உள்ளனர்.
அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த இணங்கும் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக தெரிவித்திருந்தது.
இதற்கான இணக்கப்பாடுகள் எட்டாவிட்டால், தனித்து போட்டியிடலாம் கட்சியில் உள்ள பெருபான்மையான உறுப்பினர்கள் நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் முன்னர் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அந்த மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !