![]() |
முஸ்லிம் சிவில் இயக்கங்களின் கூட்டமைப்பான இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஆகியவற்றின் தலைமையில் நேற்று முன் தினம் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஒன்றுபட்டு செயற்பட இக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
இக் கூட்டத்தில் கைத் தொழில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், ஹுனைஸ் பாரூக் எம்.பி. ஆகியோர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத், எம்.எஸ். எம். அஸ்லம் ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் மற்று மொரு கூட்டத்தை நடத்தவும் இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் என். எம். அமீன் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !