
மேற்படி சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில, தந்தையின் பாதுகாப்பில் மேற்படி சிறுமியும் அவரது 6 வயதான சகோதரர் ஒருவரும் இருந்துவந்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி மேற்படி சிறுமியின் தந்தை தனது தந்தையின் மரணச் செய்தி கேட்ட நிலையில், இரு சிறார்களையும் உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மரண வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அன்றையதினம் இரவு 10 மணிக்கு வந்த மேற்படி சந்தேக நபர், மரண வீட்டிற்கு தான் செல்வதாகவும் இரு சிறார்களையும் தந்தையிடம் அழைத்துச் செல்வதாகவும் கூறி இரு சிறார்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.
வரும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பின்புறத்தில் மேற்படி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு இவர்களை வீதியில் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மறுநாள் அதிகாலை வீட்டைச் சென்றடைந்த மேற்படி சிறுவர்கள், நடந்தவற்றை உறவினரிடம் கூறியதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதுடன்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !