
கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இதில் 101 தமிழர்களும் 8 சிங்களவர்களும் அடங்குவர்.
"செவ்வந்தி துவ" எனப்படும் மீன்பிடி படகில் இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், வாழைச்சேனை, கல்முனை, தலவாக்கலை, கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !