Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » ஐ பேட் VS சேர்பேஸ் : அப்பிளுக்கு போட்டியாக களத்தில் குதித்தது மைக்ரோசொப்ட் _

ஐ பேட் VS சேர்பேஸ் : அப்பிளுக்கு போட்டியாக களத்தில் குதித்தது மைக்ரோசொப்ட் _

Written By sakara on Thursday, June 21, 2012 | 6:02:00 PM


  டெப்லட் கணனிகள் என்றவுடனேயே எமக்கு ஞாபகம் வருவது அப்பிளின் ஐ பேட்டாகும்.

கூகுளின் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் பல டெப்லட்கள் சந்தையில் உள்ளபோதிலும் அவை ஒன்றாலும் அப்பிள் ஐபேட்டின் விற்பனையை முந்த முடியவில்லை.

பிளக்பெரி வெளியிட்ட 'பிளே புக்' டெப்லட்டும் ஐ பேட்டுடன் மோத முடியாமல் சந்தையில் காணாமல் போனது.

இவ்வாறு டெப்லட் சந்தையை தன்கைக்குள் வைத்துள்ள ஐ பேட்டின் ஆதிக்கத்தினை முடிவுகட்டும் நோக்குடன் மைக்ரோசொப்ட் புதிய டெப்லட் ஒன்றினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு 'சேர்பேஸ்' எனவும் பெயரிட்டுள்ளது.



மைக்ரோசொப்ட் பொதுவாக மென்பொருள் தயாரிப்புத்துறையிலேயே ஜாம்பவானாகத் திகழ்கின்றது.

எனினும் நீண்டநாட்களாக டெப்லட் சந்தையில் நுழைய மைக்ரோசொப்ட் ஆர்வம் காட்டி வருவதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது டெப்லட்டினை மைக்ரோசொப்ட் வெளியிட்டுள்ளது.



மைக்ரோசொப்டின் மேற்படி டெப்லட்டானது 2 மாதிரிகளாக வெளியாகவுள்ளன.

விண்டோஸ் ஆர்.டி மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows RT) , விண்டோஸ் 8 புரோ மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows 8 Pro) என இம்மாதிரிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் தனித்தனியான தொழில்நுட்ப அம்சங்கள் இதோ

Surface for Windows RT

Processor: NVIDIA-made ARM chip
Weight: 676 grams
Thickness: 9.3 millimeters
Display: 10.6-inch ClearType HD capactive touchpanel
Battery: 31.5Wh
I/O: microSD, USB 2.0, Micro HD Video, 2×2 MIMO antennae
Software: Windows RT + Office Home & Student 2013 RT
Accessories: Touch Cover, Type Cover, VaporMg Case & Stand
Capacity: 32GB / 64GB
Availability: “Around” the Windows 8 launch (fall 2012)

Surface for Windows 8 Pro

Processor: Intel Core i5 (Ivy Bridge)
Weight: 903 grams
Thickness: 13.5 millimeters
Display: 10.6-inch ClearType Full HD (1080p) capacitive touchpanel
Battery: 42Wh
I/O: microSDXC, USB 3.0, Mini DisplayPort, 2×2 MIMO antennae
Software: Windows 8 Pro
Accessories: Touch Cover, Type Cover, VaporMg Case & Stand, Pen with Palm Block
Capacity: 64GB / 128GB
Availability: “Three months after” the Windows 8 launch this fall

குறித்த டெப்லட்களானவை கீபோர்ட் மற்றும் நிறுத்திவைக்கக் கூடியவகையில் ஸ்டேன்ட் ஒன்றையும் கொண்டுள்ளமையானது சிறப்பம்சமாகும்..

இவற்றின் ஆரம்ப விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் மற்றைய டெப்லட்களுக்கு சமமாக போட்டித்தன்மையான விலையைக் கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.



அடுத்த சில வருடங்களில் டெப்லட்களின் விற்பனை பல மடங்காக அதிகரிக்குமென சந்தை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டே மைக்ரோசொப்டும் டெப்லட் சந்தையில் களம் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

ஐபேட்டினை விட சிறப்பான வசதிகள் சிலவற்றை சேர்பேஸ் கொண்டுள்ளது என்பதனை மறுக்கமுடியாது. எனினும் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும் ஐபேட்டின் சாதனையை சேர்பேஸ் முந்துகின்றதா அப்பிளை விடத் தானே சிறந்தவன் என மைக்ரோசொப்ட் நிரூபிக்கின்றதா
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya