தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து எழுதப்பட்ட புத்தகம் ஒன்று எழுத்தாளர் எஸ்.முத்தையாவால் இன்று (25) சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
´பிரபாகரன் சகா - ஈழம் வீரரின் எழுச்சியும் வீழ்ச்சியும்´ என்ற பெயரில் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.முராரி எழுதியுள்ள இப்புத்தகத்தில் பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை எவ்வாறு உருவாக்கினார், இயக்கம் எப்படி ஆயுத போராட்டத்தில் சிக்கியது உள்ளிட்ட பல விடயங்களை விபரித்துள்ளார்.
இங்கு உரையாற்றிய எழுத்தாளர் எஸ்.முத்தையா, இலங்கைத் தமிழர் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினால் நாட்டின் நிலை மாற்றமடையும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இங்கு உரையாற்றிய மெட்ராஸ் பல்கலைக்கழக தெற்கு, தெற்காசிய பிரிவு முன்னாள் பணிப்பாளர் வி.சூரியநாராயணன், பொருளாதாரத்தைவிட அரசியல் உரிமை தேவையே தமிழர்களுக்கு அவசியம் எனத் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீள்குடியேற்ற மக்களின் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என இங்கு உரையாற்றிய பலர் கூறியுள்ளனர்.
ஊடகவியலாளராக இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததன் பயனாக இப்புத்தகம் எழுதப்பட்டதாக புத்தக ஆசிரியர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.முராரி குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !