![]() |
இஸட் புள்ளிகளை வழங்கிய போது மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என ஆராய குழுவொன்றை நியமிக்க அனுமதி தரும்படி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க உயர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 876 பேர் தோற்றியிருந்தனர். இதில் 144341 பேர் புதிய பாடத்திட்டத்தில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இரண்டு பாடத்திட்டங்களிலும் தோற்றிய இம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிப்பதற்கான இஸட் புள்ளி வழங்கும் முறையில் பிரச்சினை ஏற்பட்டது.
தீர்ப்பு வெளியானதன் பின்னர் ஜீ.சி.ஈ உயர்தர பரீட்சை முடிவுகளை மீள் பரிசீலனை செய்ய விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மீள்பரிசீலனை முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !