![]() |
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள யுனெஸ்கோவின் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த தேவாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியானது ஐ.நாவின் பாரம்பரியச் சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டால் பலஸ்தீனப்பகுதியில் முதலாவதாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியாகப் பெயர்பெறும்.

பலஸ்தீனத்தினாலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஐ.நாவின் யுனெஸ்கோவில் தனது அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பலஸ்தீனம் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டது.
எனினும் இத்தேவாலயம் பாரம்பரியச் சின்னமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது
பெத்லஹேமானது மேற்குக் கரைப் பகுதியில் ஜெருசலேமிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு அமைந்துள்ள பிறப்பிடத் தேவாலயம் (Church of the Nativity) உலகிலுள்ள பழைமையானதும் தொடர்ந்து செயற்பாட்டிலுள்ளதுமான தேவாலயங்களில் ஒன்றாகும்.
வருடந்தோறும் சுமார் 2 மில்லியன் பயணிகள் இங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !