
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலங்களில் இவ்வாறான குடியேற்றங்களினாலேயே தமிழ் முஸ்லிம் இனங்களிடையே இனமுறுகலும், கலவரங்களும் ஏற்பட்டன. இது போன்று மீண்டும் இவ்வாறான நிலையில் திட்டமிட்ட சில முஸ்லிம் குழுக்களால் தாழங்குடா, வேடர் குடியிருப்பு, ஆரையம்பதி கிழக்கு பகுதிகளில் வேலி இடப்பட்டு அரச காணிகளும் தனியார் தமிழருக்குரிய காணிகளும் சுவீகரிப்புச் செய்யப்படுவதும், பின்பு அவை சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு வேறு பிரதேசங்களில் இருந்து மக்களைக் குடியமர்த்துவதற்கும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக பலமுறை பிரதேச செயலாளர் பொலிசாருக்கு அறிவித்துள்ளதுடன், நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளார். ஆனால் இவை குறைந்தபாடாக இல்லை. இதனைத் தடுப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வெளிப் பிரதேசங்களில் இருந்து திட்டமிட்டு குடியேறுவது சட்டத்திற்கு முரணானது.
இது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை பிரதேச செயலாளர்களுக்கு உள்ளது என சுட்டிக்காட்டியதனை அடுத்து, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களுடாக இனங்களைக் குழப்ப நினைக்கும் சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு ஆணை வழங்க வேண்டும் எனவும் விஷேட குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !