
2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுனிசெப்புடன் இணைந்து சிறுவர் போராளிகளை விடுவித்ததமையை அடுத்து அக்கட்சியும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசாமி தொரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !