![]() |
லண்டனில் உள்ள சவூதி தூதரகத்தினால் இதுதொடர்பான அறிக்கையொன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
சவூதியின் இத்தீர்மானமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெறும் எந்த வீராங்கனையும் அதில் பங்கேற்க எவ்வித தடையும் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை சவூதி ஒலிம்பிக் குழு கண்காணிக்கும் எனத் தெரியவருகின்றது.
பல்வேறு எதிர்ப்புகளையும் மீறியே அந்நாட்டு மன்னர் அப்துல்லா இம்முடிவினை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதுவரை காலமும் சவூதி நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் எவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை.
பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு அங்கு பல்வேறு தடைகள் மட்டும் எதிர்ப்புகள் நிலவிவந்தன.
எனினும் சர்வதேச அழுத்தத்தின் விளைவாகவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. _
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !