.jpg)
பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய இந்நபருடனான நட்பு, காதலாக மாறியதாகவும் செல்லிடத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இருவரும் பம்பலப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் கடந்த வருடம் செப்டெம்பர் 17 ஆம் திகதி சந்தித்தாகவும் மேற்படி ஆசிரியை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்த அந்நபர், தன்னை நிர்வாணமாக படம்பிடித்தாகவும் மேற்படி ஆசிரியை தெரிவித்துள்ளார். அதன்பின் தன்னை அச்சுறுத்திய அந்நபருக்கு ஒரு தடவை 7000 ரூபாவும் மற்றொரு தடவை 4000 ரூபாவும் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்திய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
தான் நிரபராதி என சந்தேக நபர் கூறினார். இது தொடர்பான வழக்கை ஓகஸ்ட் 3 ஆம் திகதிக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன ஒத்திவைத்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !