
சூரிய வட்டத்தின் ஊடாக வெள்ளிக்கிரகம் நகர்ந்து செல்வதை வெள்ளிக்கிரகத்தின் சூரிய கடப்பு என தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் வெள்ளிக்கிரகம் ஒரு சிறிய புள்ளி போல சூரியனின் முன்பாக ஊர்ந்து செல்வது போல காணலாம்.
புதன் மற்றும் வெள்ளிக்கிரகங்களின் சுற்றுப்பாதைகள் பூமியின் சுற்றுப்பாதையின் உட்புறமாக அமைந்துள்ளன.
எனவே இந்த இரண்டு கிரகங்கள் மட்டுமே சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வர இயலும். வெள்ளியின் சூரிய கடப்போ 243 ஆண்டுகளுக்கு 4 முறையே நிகழ்கிறது.
இவை இரட்டிப்பாக அதாவது 8 ஆண்டுகள் இடைவெளியில் அமைந்த இரட்டை நிகழ்வுகளாக நிகழும். இந்த இரட்டை நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட காலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டது ஆகும்.
தொலை நோக்கி கொண்டு சூரியனின் பிம்பத்தை வெண் திரையில் விழச் செய்து பார்த்தால் சூரியனின் குறுக்கே கறுப்பு புள்ளி போன்ற தோற்றத்துடன் வெள்ளிக்கிரகம் கிழக்கில் இருந்து மேற்காக கடந்து செல்வதை காணலாம்.
வெள்ளியுடன் சூரியப்புள்ளிகளும் தெரியும். ஆனால் வெள்ளியை காட்டிலும் சூரியப்புள்ளிகள் சற்று ஒளியுடன் இருப்பதை காணலாம்.
சூரியனை வெள்ளி கடக்கும் போது வெறும் கண்ணாலோ, தொலைநோக்கி, பைனாக்குலர் போன்ற உருப்பெருக்கி கொண்டு பார்க்கலாம். சூரியனை நேரடியாக பார்க்க கூடாது.
அவ்வாறு பார்த்தால் பார்வை இழக்க நேரிடும். சூரியனின் பிம்பத்தை ஒரு வெண் திரையில் விழச் செய்து அதை காணலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !