
இது தொடர்பில் ஆராயும் அபிவிருத்திக்குழுக்கூட்டம் நேற்று பிற்பகல் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
2012ஆம் ஆண்டுக்காக 370 திட்டங்களுக்கு சுமார் ஏழு கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவற்றில் கமநெகும திட்டத்தின் ஊடாக 48 திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுக்காக சுமார் 4கோடியே 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திவிநெகும திட்டத்தின் ஊடாக 48 வறுமை ஒழிப்பு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அவற்றுக்காக சுமார் 19 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் 31 இலட்சம் ரூபாவும் மாகாணசபை உறுப்பினர்களின் 16 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாக்களும் இந்த ஆண்டு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வருடாந்த விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் சுற்றுலா மற்றும் பல்வேறு துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதன்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !