![]() |
அந்தோனி அந்தோனியோ நோர்மன் என்ற மேற்படி நபர், தன்னை 25 வயது இளைஞர் எனக் குறிப்பிட்டு குறிப்பிட்ட சிறுமியுடன் பேஸ்புக் இணையத் தளத்தின் அரட்டைப் பகுதியினூடாக தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் பின் சிறுமியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்த நோர்மன் அவரது வீட்டு விலாசத்தைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மபிள்டன் நகரிலுள்ள சிறுமியின் வீட்டிற்கு சிறுமி தனித்திருந்த போது வந்த நோர்மன், சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பில் பொலிசாரிடம் சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிசார் நோர்மனைக் கைது செய்துள்ளனர்.
அவர் மீது பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம், சிறுமி ஒருவரிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்டமை உள்ளடங்கலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. _
![]() |
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !