![]() |
இந்தியாவில் பிரபலமான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) இருபது-20 தொடரை தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டில் இது போன்ற பிரிமியர் லீக் போட்டிகளை தொடங்கி வருகின்றன.
சமீபத்தில் பங்களாதேஷிலும் பங்களாதேஷ் பிரிமியர் லீக்(பி.பி.எல்) போட்டிகள் நடைபெற்றன.
இதேபோல இலங்கையும் இலங்கை பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்)போட்டியை தொடங்கியுள்ளது. கடந்த வருடமே நடத்த முயற்சி செய்தும் இந்திய கிரிக்கெட் சபையின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இந்திய கிரிக்கெட் சபை ஒத்துழைக்காத போதும் இலங்கை கிரிக்கெட் சபை முழு முயற்சியில் எஸ்.எல்.பி.எல் தொடரை நடத்த உள்ளது.
இதன்படி மிகவிரைவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள எஸ்.எல்.பி.எல். போட்டிகளுக்கான அணிகளை விற்பனை செய்யத் தீர்மானித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் சபைஅணிகளுக்கான விலைகளையும் அறிவித்துள்ளது.
இதன்படி அணி ஒன்றிற்கான அடிப்படை விலையாக 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
7 அணிகளையும் இலங்கைக் கிரிக்கெட் சபை 7 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாகவும், அதனை அடிப்படையாக வைத்து எஸ்.எல்.பி.எல்.இன் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதற்கான ஏலங்கள் வரவேற்கப்படுவதாகவும் இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஏலத் தொகையினை அறிவிப்பதற்கான இறுதித்தினமாக யூன் 25ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏலத்தில் வெற்றிபெற்றவர்களது விபரங்கள் அன்றே அறிவிக்கப்படும் எனவும் இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
விருப்பமுள்ளவர்கள் 3 அணிகளுக்கு அதிகபட்சமாக ஏலத்தொகையை அறிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முதலாவது எஸ்.எல்.பி.எல் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10ம் திகதி முதல் 31ம் திகதி வரை கொழும்பிலும், பல்லேகலவிலும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட 7 அணிகள் பங்குபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டபோதும் எஸ்.எல்.பி.எல் அணிகளின் விலை ஐ.பி.எல் போட்டிகளை பல மடங்கு குறைவாகும்.
2008ம் ஆண்டில் ஐ.பி.எல் முதன் முறையாக நடைபெற்ற போது அணிகளுக்கான அடிப்படை விலையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டதோடு, 2010ம் ஆண்டில் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்ட போது அடிப்படை விலையாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !