![]() |
சீனாவில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளது. அதையும் மீறி 2ஆவது தடவையாக கர்ப்பமானால் அரசுக்கு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இந்நிலையில் ஷான்க்சி மாகாணத்தில் உள்ள ஜென்பிங் கவுன்ட்டியைச் சேர்ந்த பெங் ஜியாமி என்ற பெண் 2ஆவது முறையாகக் கருவுற்றார். இதையடுத்து அவருக்கு அரச அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

ஆனால் அவர் அபராதத் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து அரசு அதிகாரிகள் 7 மாதக் கர்ப்பிணியாக இருந்த பெங்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இது தொடர்பான படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படங்களைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேவேளை பெங்கிற்கு கட்டாய கருக்கலைப்பு செய்த அதிகாரிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !