![]() |
இம்மாதம், 28 மற்றும் 28ஆம்திகதிகளுக்கென நேர்முகப் பரீட்சைக்கடிதங்கள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,
கடந்த மாதத்தில் பட்டதாரிகள் நியமனமானது, மூப்பு அடிப்படையிலும், ஆண்டு அடிப்படையிலும் வழங்கப்படுவது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பேசியிருந்தேன்.
இந்த நிலையில் தமிழ் பேசும் பட்டதாரிகள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்ட வகையில் நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் பாதகங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகளின் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுவது தவறான நடவடிக்கை என பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
இவ்வாறான செயற்பாடுகளினால் நீண்டகாலமாக அரச நியமனங்களுக்காகக் காத்திருக்கும் பெருந்தொகையான பட்டதாரிகள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக மாறும் சந்தர்ப்பங்களும், அதனால் பல வீண் விளைவுகளும் ஏற்படலாம். எனவே அரசாங்கம் இது தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுத்தல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !