
கிழக்கு மாகாணத்தின் 'தங்க அணிகளின் போர்' என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் மற்றும் திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரிகளுக்கிடையிலான 19ஆவது வருட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் வெற்றி பெற்றது.
திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது வருடமாகவும் சிவானந்த வித்தியாலய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது.
1993ஆம் ஆண்டு கிழக்கின் இரு பெரும் பாடசாலைகளான திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் என்பவற்றிக்கிடையில் சினேகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட 'தங்க அணிகளின் போர்' என்ற இப்போட்டித் தொடர் இந்த ஆண்டுடன் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளது.
இதுவரை நடந்த 19 போட்டிகளில் 8 போட்டிகளில் சிவானந்த வித்தியாலயமும் 11 போட்டிகளில் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரியும் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் நன்றி -தமிழ் மிறர்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !