.jpg)
(றிப்தி அலி)
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கே வழங்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கூறினார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த கிழக்கு மாகண சபை தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே எமது கட்சி போட்டியிட்டமையினால் இம்முறை முதமைச்சர் பதவியினை எமது கட்சிக்கே வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும் முதலமைச்சர் பதவியினை கோருவதற்கான எந்தவித தகுதியுமில்லை என அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதா என வினவியதற்கு, 'தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிகளாகவே அனைத்து முஸ்லிம் கட்சிகளும் உள்ளன' என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இதனால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முஸ்லிம் முதலமைச்சரை கைப்பற்ற முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !