வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை
பிரபல ஹிந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு, மும்பை வான்கடே மைதானத்தில் நுழைவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இதில் ஷாருக்கின் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதனால் உற்சாகத்தில் இருந்த ஷாருக்கான் மது அருந்தி மைதானத்தில் நுழைய முற்படும் போது மைதான காவலர்கள் தடுத்துள்ளனர்.
எனவே, கோபமடைந்த ஷாருக்கான் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவரையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் தகாத வார்த்தைகளால் ஷாருக்கான் திட்டயதாக் கூறப்படுகிறது. இந்நிலையில், குடிபோதையில் ஒழங்கீன நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஷாருக்கான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைதான அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !