![]() |
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
"கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு. நிறைவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள தனிக் கட்சி முஸ்லிம் காங்கிரஸாகும். ஏனைய கட்சிகளுக்கு இவ்வாறான ஒரு வாக்கு வங்கி இல்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகள் முதலமைச்சர் பதவி கோருவதில் எவ்விதத்திலும் நியாயமாகாது நியாயப்படுத்தவும் முடியாது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் மாகாணம் கிழக்குத்தான். இங்கு 42 வீதமானோர் முஸ்லிம்களாவர். 75 வீதமான வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸுக்கே இருக்கிறது. வேறு எந்தக் கட்சியும் இதை மறுக்க முடியாது. இந்த நியாயங்களை அடிப்படையாக வைத்து முதலமைச்சர் பதவியை எவரும் கோர முடியாது. மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் கனவும் இதுவாகவே இருந்தது. முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவரது கனவு நனவானது பற்றி முஸ்லிம்கள் பெருமைப்பட வேண்டும்.
மறைந்த தலைவர் தந்தை செல்வா கூட முஸ்லிம்களுக்கென்று தனி மாகாணம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். முஸ்லிம்களும் தமிழரசுக் கட்சியில் அங்கத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழர்கள் தந்தை செல்வாவின் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் இருந்த உறவுகளுக்கிடையில் பிளவுகள் பிரிவினை வாதிகளாலேயே ஏற்படுத்தப்பட்டன. எனவே, தமிழ் மக்கள் முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும். என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !