![]() |
மட்டக்களப்பு இராஜதுரை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மூதறிஞர் தந்தை செல்வாவின் 35ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் அண்மையில் தெய்வ நாயகம் மண்டபத்தில் அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற போது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,
சுதந்திர இலங்கையின் அரசியலானது ஜனநாயகம் என்ற போர்வையில் ஈழத் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் சதி நடவடிக்கையுடன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே செல்வதைக் காண முடிகிறது. இதன் ஆரம்பமாக பட்டிப்பளை ஆறு என்ற பாரம்பரியத்தமிழ்ப் பெயர் கல்லோயாவாக மாற்றம்பெற்று அப் பிரதேசங்களில் குடியேற்றங்களை நிறுவி வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்களவர்களைக் குடியமர்த்தியதுடன் கிழக்கில் சிங்களவர்களின் வருகை ஆரம்பமானது.
தொடர்ந்தும் வட, கிழக்கில் பல சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று தமிழர்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டன. அண்மையில் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் 25000 ஏக்கர் அரச காணியில் சிங்களவர்கள் அத்துமீறி ஆட்சி செலுத்தி வருகின்றார்கள். இக்காணி உரிமை யாருக்கு வேலி அமைப்பதற்கான நிதியுதவியை மாகாண சபை நிருவாகம் வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது எனவும் தெரிவித்தார் .
வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் இந்த நாட்டில் வாழ்ந்து வரும் சிங்களவர்களும் தமிழர்களும் வெவ்வெறு தேசிய இனங்கள் வெவ்வேறு பிரதேசங்களைத் தாயமாகக் கொண்டவர்களாக வாழ்ந்து வந்தனர் என்ற உண்மை புரியும். இதனை ஏற்றுக் கொண்ட போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இரண்டு பிரதேசங்களையும் வெவ்வேறாக நிர்வகித்தனர் என்ற வரலாறு இவ்வாறான காலகட்டத்தில் எமக்கு ஓர் உந்து சக்தியைத் தந்து நிற்கிறது.
இந்த நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் அழிவுகளில் இருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் அரசியல் ஞானி தந்தை செல்வா மாறி மாறி வந்த ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் கூறியதோடு சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மை இனத்துக்குக் கிடைக்கும் சகல உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வழியைத்தேடுங்கள் எனப் பல தடவைகள் எடுத்துக் கூறியும் சிங்களத்தலைவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் முப்பது வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழிப்போராட்டம் நடத்தியதோடு இப் போராட்டம் வெற்றியளிக்க முடியாத நிலையில் தவிர்க்க முடியாதவை. ஆனால் வில்லங்கமான காரியம் தான் என வட்டுக்கோட்டையில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆயுதப்போராட்டம் முப்பது வருடங்களாக இடம்பெற்ற போது சிங்கள ஆட்சியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாதவர்களாக உலக நாடுகளின் உதவியுடன் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இத்தனை சோக சம்பங்களுக்கு பின்னராவது ஆட்சியாளர்கள் திருந்தியிருக்க வேண்டும். மாறாக தமிழின ஒழிப்பிற்கு வேகமான செயற்பாடுகளை முன்னெடுத்த காலகட்டத்தில் உலகம் விழித்துக் கொண்டது. இலங்கை அரசுக்கு பல வழிகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு திசை கெட்டுத் திரியும் கப்பலின் நிலை போன்று காணப்படுகின்றது. உண்மையிலேயே தமிழ்த் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் மூன்றாவது போராட்டம் இராஜதந்திர ரீதியிலானதாகும். அறுபது ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றிய அரசு உலகையும் ஏமாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதுவரை காலமும் விதி தமிழர்களின் வாழ்வோடு விளையாடியது. இன்று தமிழன் தன்னாட்சியைப் பெறும் தகைமைக்குரியவன் என்பதை புரிந்து கொண்டு தமிழர்களுக்கு வழிகாட்டும் பணியினை செய்து வருகிறது. விரைவாக நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வோம் என்பதை நம்பிக்கையுடன் அவர் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !