.jpg)
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்தி அரசரெட்ணம் இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மருத்துவத்துறையின் வரலாற்றுப் படிமங்களையும் சுகவாழ்வுக்கு தேவையான மருத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, பதுளை, சீதுவை, நீர்கொழும்பு வவுனியா, மன்னார், திருகோணமலை ஆகிய பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இக்கண்காட்சியினை பார்வையிடுவதற்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.
எதிர்வரும் 26ஆம் திகதிவரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வில், யாழ்.மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் கா.சிவபாலன், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசா, மருத்துவத்துறை வைத்தியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !