![]() |
Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஓடியோ, பி.டி.எப், கோப்புகள், படங்கள ஆகியவற்றை சேமித்து வைக்கக்கூடியதும் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதும் தான் 'Google Drive'.
இவற்றை நாம் பார்ப்பது மட்டுமன்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். ஒரே நேரத்தில் பலர் இணைந்து மாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும். தற்போது 5GB இலவச நினைவக வசதியுடன் இது வெளியாகியுள்ளது..
இதற்கும் மேலதிகமாக சேமிப்பகம் வேண்டுமென்றால் 25GB க்கு $2.49/month, 100GB க்கு $4.99/month, 1TB க்கு $49.99/month என்ற அடிப்படையில் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் சிறப்பம்சங்கள்:
ஒவ்வொருவரும் 5GB இலவச இட வசதியைப் பெறலாம்.
Windows, Mac கணனிகள் மற்றும் Android மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள், டெப்லட்கள் மூலமும் இச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். கூடியவிரைவில் அப்பிளின் ஐ.ஓ.எஸ்.மூலம் இயங்கும் சாதனங்களுக்கும் இது சப்போர்ட் செய்யவுள்ளது.
மொபைல் சாதனங்களுக்கான 'கூகுள் டிரைவ்' அப்ளிகேசன்.
'கூகுள் டோக்' வசதியும் இப்பொழுது கூகுள் டிரைவில் இணைந்துள்ளது.
கூகுள் டிரைவ் தற்பொழுது போட்டோஷொப்(PSD) பைல்கள் உட்பட 30 க்கும் அதிகமான கோப்பு வகைகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
கூகுள் டிரைவில் சேமித்து உள்ள கோப்புகளைக் குறிப்பட்ட குறிச்சொல்லைக் கொடுத்தோ அல்லது பைல்வகையைக் கொடுத்தோ தேடும் வசதி உள்ளது.
கூகுள் டிரைவில் OCR (Optical Character Recognition ) எனப்படும் எழுதப்பட்ட அல்லது பதிக்கப்பட்ட எழுத்துக்களை ஸ்கேன் செய்து கணனிக்குப் புரியும்படி மாற்றும் ஒரு தொழில்நுட்பம் இணைந்துள்ளதால் ஏதாவது ஒரு ஸ்கேன்செய்யப்பட்ட கோப்பினைத் தரவேற்றினால் அதிலுள்ள எழுத்துக்களை மட்டும் தனியே பிரித்து எடுக்க முடியும்.
கூகுள் டிரைவில் உள்ள போட்டோக்களை நேரடியாக கூகுள் பிளசில் பகிரும் வசதியும் உள்ளது மற்றும் விரைவில் கூகுள் டிரைவ் பைல்களை நேரடியாக ஜிமெயிலில் அட்டார்ச் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது மட்டுமன்றி சில மூன்றாம் தரப்பு மென்பொருள்களின் உதவியுடன் தொலைநகல் அனுப்பும் வசதி, காணொளிகளை எடிட் செய்யும் வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இவ்வசதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அனைவருக்கும் இது வழங்கப்படவில்லை.
இந்த தொடுப்பின் drive.google.com/start மூலம் சென்று நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
தற்போது கிடைக்காவிட்டாலும் அதில் உள்ள Notify பட்டனை அழுத்தி விட்டால் பின்னர் இவ் வசதி தயாராகியதுடன் உங்களுடைய மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்பப்படும்.
மேக நினைவகம் (Cloud storage) தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படுகின்ற இவ்வசதியை ஏற்கனவே பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
தொழில்நுட்ப உலகில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசதிகளில் ஒன்றாக மேக நினைவகமும் திகழ்கின்றது.
நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை இத் தொழில்நுட்பம் நமக்கு அளிக்கின்றது.
இதைப் போன்ற வசதியினை வழங்கும் ' ட்ரொப் பொக்ஸ்' வேகமாக வளர்ச்சியைடைந்து வருகின்றது.
அப்பிள் நிறுவனம் ஐ கிளவுட் (iCloud) எனப்படும் மேக சேமிப்பக சேவையை (cloud storage service) ஏற்கனவே வழங்கி வருகின்றது.
மைக்ரோசொப்ட்டும் 'ஸ்கை டிரைவ்' என்ற வசதியினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !