
இவர் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டார்ட்மெத் கல்லூரியின் தலைவரான ஜிம் யோங் கிம் பெயரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பரிந்துரை செய்திருந்தார்.
கொரியாவில் பிறந்த கிம் ஒரு மருத்தவர் ஆவார். தன்னுடைய சுகாதார மற்றும் வளர்ச்சித் திட்ட நடவடிக்கைகளால் உலகம் முழுவதிலும் அறியப்பட்டவர்.
உலக வங்கியின் தலைவராக இப்போது இருந்து வரும் ராபர்ட் பி.ஜீலிக் தனது ராஜிநாமாவை கடந்த மாதம் அறிவித்ததில் இருந்தே, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வந்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !