



மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரிய, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நிஷாந்த முத்துஹெட்டிகம, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் வசந்த பெரேரா ஆகியோர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அமைச்சர் பதவிக்காக தாம் நீண்டகாலமாக காத்திருப்பதாகவும் தமது செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் பெற்ற வாக்குகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு தாம் அமைச்சர் பதவிகளை பெறுவதற்கான தருணம் இதுவெனவும் அக்கடிதத்தில் மேற்படி நான்கு எம்.பிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கோரிக்கை குறித்து தான் விரைவில் கருத்திற் கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேற்படி கடிதம் ஜனாதிபதியிடம் கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்டதாக முத்துஹெட்டிகம எம்.பி. டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !