
இந்த அமைப்பின் முதலாவது வருடாந்த மாநாட்டை புதுடில்லியில் ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அவர் தான் முன்பு மட்ரிட் கிளப், கிளின்டன் பூகோள முன்னெடுப்பு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்ததாகவும் இப்போது தனது சொந்த பவுன்டேஷனை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
இந்த தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய உபகண்டம் தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் எடுக்கும். இவற்றை ஆராய்வதற்கு உலக அளவில் ஆராய்ச்சி நிபுணர்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வகையில் பெறப்படும் முடிவுகள் கொள்கைப் பரிந்துரைகளாக தொடர்புடைய கொள்கை வகுப்பாளர்களுக்கும் வாண்மையாளர்களுக்கும் வழங்கப்படும் என அவர் கூறினார்.
25 வருடகால சிவில் யுத்தத்தின் பின் இரண்டு இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கம் காண்பதற்கான அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் யுத்தம் முடிவுற்ற பின் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் காட்டிவரும் அசமந்த போக்கையிட்டு தான் ஆச்சரி;யமடைவதாகவும் அவர் கூறினார்.
'எனது காலத்தில் நாம் சகல நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருந்த அணிசேரா கொள்கையை பின்பற்றினோம்' என அவர் கூறினார். இதனால் தான் பல மேற்கத்தேய நாடுகள் தமிழ்ப் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தின. அல்லது அந்த இயக்கத்தை தடை செய்தன என அவர் கூறினார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்ற நிலைமையில் இலங்கைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது. இந்தியா, இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் வாக்களிக்க காரணம் எதுவென தெரியவில்லை என அவர் கூறினார். ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என கூறிய அவர், இந்தியாவுடனான உறவுகள் முக்கியமானவை, தீர்க்கமானவை என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !