Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » மும்தாஜ் சாஜஹானை எதற்காக ஏமாற்ற வேண்டும்? அதிரடித் தகவல்கள். (வீடியோ இணைப்பு)

மும்தாஜ் சாஜஹானை எதற்காக ஏமாற்ற வேண்டும்? அதிரடித் தகவல்கள். (வீடியோ இணைப்பு)

Written By sakara on Wednesday, April 11, 2012 | 2:19:00 PM


ஒரு தடவை மன்னன் சாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட சாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு வரத்தினங்களை எடை போட்டு ஆய்வது.
அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள். அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார். சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ்.
சாஜஹானின் மனைவியன் பெயர்கள் என்ன? சாஜஹானின் மனைவி மும்தாஜ் எவ்வாறு இறந்தார்?மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில் முதலாமவர் அக்பர்பாடி மஹால் அடுத்தவர் கண்டாரி மஹால் மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.
1631ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காக மத்திய இந்தியாவுக்குப் படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது, மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்குத் திடீரென்று ஜன்னி பிறந்தது.ஷாஜகானுக்கு தகவல் சொல்லப்பட் டது. பதறிப்போய் ஓடிவந்தார் ஷாஜகான். அருமை மனைவியை அழுதபடி வாரி மடியில் இருந்திக்கொண்டார்.சில நிமிடங்கள் கணவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. அன்பு மனைவியின் பிரிவைத் தாக்கமுடியாமல் துவண்டுபோனார் மன்னர். அந்த அன்புக்காக உளிச்சத்தங்களால் அறிவிக்கப்பட்ட வெள்ளை மௌனம்தான் அந்த தாஜ்மஹால்.
உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை. தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது. இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார்.
வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான்.1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்ஸ. அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன. தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.
தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான்.புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார். இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் ‘அமானாத்கான்’ பெயர் சிபாரிசுச் செய்யப்பட்டது.
‘நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை ‘சரிஸகையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான். இன்றைக்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது.
இப்படி அங்குலம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான். தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது. இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா?
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள். லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார். இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்ஸ இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுஸகலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார். அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே ஸ ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்.
மும்தாஜின் கடைசி நாள்:
மும்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள்.
தாஜ்மஹால் உண்மை ரகசியம்: (காதலின் சின்னம்)
தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.
இப்ப விஷயத்துக்கு வருவோம்.
தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று பேராசிரியர் பி. என். ஓக் குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் “தேஜோ மஹாலயா” என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார். நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) “ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்”. எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.
முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை “தாஜ் மஹால்” எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் “மஹால்” எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த “மஹால்” எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், “மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு “தாஜ்” என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும்.
மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் – “பாதுகாப்பு” எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya