
சுமார் 7 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
இன்றைய தினம் அவர் இந்தியாவை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி இந்திய பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் பவன் குமார் பன்சாலாவை சந்தித்துவிட்டு இராஜஸ்தான் செல்வதற்கு முன்னர் இந்திய பிரதமரை சந்தித்து அவருடன் மதிய உணவு விருந்துபசாரத்தில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் மூலம் இந்திய - பாகிஸ்தானுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியுடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மலிக், தனது மகன் பூட்டோ சர்தாரி உள்ளிட்ட 25 பேர் அடங்கிய குழு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்க
து
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !