![]() |
ஆனால் இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்டது. அரசாங்கத்திற்கு இராஜதந்திர ரீதியான எதிர்காலத் திட்டம் கிடையாது. இதுவே இன்றைய நிலைமைக்கு காரணமாகும்.
இது நாட்டுக்கு எதிரான பிரச்சினையல்ல. அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் அரசுக்கு எதிராகவே இப்பிரச்சினை எழுந்துள்ளது. எனவே, அரசாங்கமே இதற்குத் தீர்வு காணவேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் இராஜதந்திரம் கிடையாது.
சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் இந்தியாவுடன் நட்புறவை பேணி வந்துள்ளோம். அந்நாட்டின் உதவி எமக்கு அவசியம் தேவையாகும். ஆனால் இன்றைய அரசாங்கத்தால் இந்தியாவின் நட்புறவை பெற முடியவில்லை. இது எமது வெளிவிவகாரக் கொள்கையின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறானதோர் தருணத்தில் அமெரிக்கா, இந்தியா பொருட்களை பகிஷ்கரிக்குமாறும் இந்நாடுகளுக்கு எதிரான மன நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமாறும் சில அமைச்சர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு நாம் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்கும் பட்சத்தில் முதலில் புத்தர் சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டிவரும். ஏனென்றால் புத்த தர்மமும் இந்தியாவிலிருந்தே எமக்கு கிடைத்தது என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !