
ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியின் மட்டு.-அம்பாறை மாவட்ட தலைவர் இரா.துரைரெட்னத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை ஒருங்கிணைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.
இந்த சந்திப்பில் அக்கட்சியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்புக் குறித்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,
ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் மக்களின் பொதுவான நலன் தொடர்பில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் இதுவரையில் அது தொடர்பில் முடிவெதுவும் எட்டப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் பேசுவதற்கு தாங்கள் முடிவெடுத்துள்ளதா அவர் தெரிவித்தா
ர்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !