
நடனமாதுவாக வர விரும்பிய அந்த குட்டிச் சிறுமியின் கனவு தனது மாமாவின் சுப்பர் மாக்கெட்டில் வைத்து தவிடு பொடியான கதை நம்மை கடந்த வருடம் கதிகலங்க வைத்தது.
தெற்கு லண்டனில் உள்ள ஸ்டொக்வேல் என்ற இடத்தில் தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த துப்பாக்கிச்சூட்டு துயரச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த சிறுமியின் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததால் கோமா நிலைக்கு சென்று கடவுள் கிருபையில் மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துஷாவைச் சுட்ட குற்றவாளிகள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லண்டன் நீதிமன்றிர் அவர்கள் மீதான வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் சி.சி.ரி.வி எனப்படும் பாதுகாப்பு கமராவில் பதிவான துஷா சுடப்பட்ட அதிர்ச்சிக் காணொளியை லண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !