ஷங்கரின் ‘ஐ’ ஒரு முன்னோட்டம்.
படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்று மீடியா விழுந்து விழுந்து எழுதினாலும் “அதெல்லாம் பொய்” என்று ஆரம்பத்தில் மறுத்த ஷங்கர், ஆடி மாசத்துக்கு முன்பே பூஜை போட வேண்டும் என்பதால், வேறு வழியில்லாமல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்!ஐ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பதும் எமி ஜாக்ஸன் ஹீரோயின் என்பதும் உங்களுக்குத் தெரியும். காமெடிக்கு சந்தானம், ஆக்சனுக்கு சுரேஷ் கோபி என்று மேலும் சிலரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் ஐ படத்தின் கதை என்ன என்பது தெரியுமா…? முதன்முறையாக பி.சி.ஸ்ரீராம்-ஷங்கருடன் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு. இந்தமுறை முழுமையாக வெளிநாட்டு திறமைகளுடன் ஷங்கர் களமிறங்கியிருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் கூட ஹாலிவுட் ஆள்தான்! எம்ஐபி 3 படத்தின் காஸ்ட்யூம் டிஸைனர் Mary Vogt ஷங்கரின் ஐ படத்தின் காஸ்ட்யூம் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அதேபோல் சண்டைப் பயிற்சி. அனல் அரசுடன் சைனாவின் பீட்டர் மிங்கும் இணைந்து பணிபுரிகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். இம்முறை வாலி, வைரமுத்து போன்ற சீனியர்களை தவிர்த்து கபிலனை முழுமையாக பயன்படுத்துகிறார் ஷங்கர். ஏற்கனவே ஒரு பாடல் ஒலிப்பதிவாகிவிட்டது. படத்தின் சிஜி வொர்க்கை ஆஸ்திரேலியன் ரைஸிங் சன் பிக்சர்ஸ் கவனிக்கிறது. இவர்கள்தான் ஹாரிபாட்டர் சீரிஸில் நம்மை மிரட்டியவர்கள்!
ஒரு மெகா டீமுடன் இந்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர். முக்கியமான விஷயம்! “இது அரசியல் படமோ பலரும் சொன்ன மாதிரி தேர்தல் கதையோ இல்லை. எனது சொந்தக்கதைக்கு சுபாவின் திரைக்கதை வசனம். இது ஒரு ஆக்ஷன் த்ரில்லார்” என்று அறிவித்திருகிறார் ஷங்கர்! ஆனால் ஷங்கர் வாய் திறக்காத ‘ஐ’ படத்தின் கதை நமக்கு பிரத்தியேகமாக கசிந்திருக்கிறது. “உடல் ஊனமுற்ற ஒருவன், மெல்ல மெல்லப் போராடி வளர்ந்து ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான் ஐ படத்தின் கதை!” இந்த அசத்தலான கதாபாத்திரத்தில்தான் சியான் விக்ரம் பொளந்து கட்ட இருக்கிறார்…



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !