Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » இயேசுநாதர் திருமணமானவரா? சர்ச்சைக் கிளப்பியுள்ள புதிய ஆராய்ச்சி

இயேசுநாதர் திருமணமானவரா? சர்ச்சைக் கிளப்பியுள்ள புதிய ஆராய்ச்சி

Written By sakara on Wednesday, September 19, 2012 | 8:26:00 PM


இயேசுநாதர் தொடர்பில் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரொருவர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியையான கரே எல். கிங் என்பவரே சர்ச்சைக்குரிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார்.
 
அம்முடிவு என்னவெனில் இயேசுநாதர் திருமணமானவர் என்பதாகும்.
 
நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓலையொன்றினை ஆராய்ந்தே அவர் இம்முடிவினை வெளியிட்டுள்ளார்.
 
அவ் ஓலையின் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை மேற்கோள் காட்டியே அவர் இம்முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
 
பண்டைய எகிப்தின்  'கொப்டிக்' மொழியிலேயே இவ் ஓலையில் எழுதப்பட்டுள்ளது.
 
 
சிதைவடைந்த நிலையிலுள்ள இவ்வோலையின் நீளம் 7.6 சென்ரிமீற்றர் என்பதுடன் உயரம் 3.8 சென்ரிமீற்றர் ஆகும்.
 
இவ் ஆராய்ச்சி தொடர்பில் கரே. எல். கிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
 “Jesus said to them, ‘My wife ...’" And a bit later, the text reads, "she will be able to be my disciple." Two lines later he then tells the disciples: 'I d well with her.'
 
அதாவது யேசுநாதர் அவரது சீடர்களுடன் மேற்கூறப்பட்டுள்ள விதத்தில் உரையாடுவது போல் அவ் ஓலையில் எழுதப்பட்டுள்ளதாக கிங் தெரிவித்துள்ளார்.
 
" எனது மனைவி, அவள் எனது சிஷ்யையாக இருக்கமுடியும், நான் அவளுடன் வசிக்கின்றேன்" போன்றவையே அதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.
 
இது தொடர்பில் கிங் கூறுவது என்னவெனில் இயேசுநாதர் திருமணமானவர் எனவும் அவரது மனைவி மேரி மெக்தலின் எனவும் தெரிவித்துள்ளார்.
 
எனினும் இவ் ஓலையின் நம்பகத்தன்மை தொடர்பில் மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக கிங் தெரிவித்துள்ளார்.
 
ரோமில் நடைபெறும் ஆராய்ச்சியொன்றிலேயே இவ் ஆராய்ச்சி முடிவினை அவர் சமர்ப்பித்துள்ளார்.
 
இதேவேளை அவரின் முடிவுக்கு பல கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya