சுமார் இரு மாதங்களுக்கு முன்னரே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி பஷார் அல் அஸாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் 2011 மார்ச் மாதம் ஆரம்பமானதிலிருந்து அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற மிக உயர் பிரமுகர் ரியாட் ஹிஜாப் ஆவார்.
அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிரிய அரசாங்க தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ரியாட் ஹிஜாப் குடும்பத்துடன் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஜோர்தானுக்கு சென்றுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. எனினும் அச்செய்திகளை ஜோர்தான் நிராகரித்துள்ளது. தற்போது ரியாட் ஹிஜாப் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
ரியாட் ஹிஜாப் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் சிரிய அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளமையானது, பஷார் அல் அஸாட்டின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதையும் அவர் தனது கட்டுப்பாட்டை இழந்துவருகிறார் என்பதையும் மக்கள் உணர்ந்துள்ளதை வெளிப்படுத்துகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !