கொழும்பில் இன்று (12) காலை இடம்பெற்ற டெசோ மாநாட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கி தமிழ் மக்களுக்கு ஈழத்தைப் பெற்றுக் கொடுக்க முனைந்த இந்தியா அது தோல்வியுற்றதால் இன்று இலங்கையில் பொருளாதார ஆக்கிரமிப்பை மேற்கொண்டு இலங்கையை அடிமைப்படுத்தி தனது இலக்கை எட்டிக் கொள்ள முயற்சிக்கிறது.
இலங்கை ஒரு இறைமை கொண்ட நாடு. எனவே எமது உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடிப்பணிந்தால் அவரால் நீண்ட காலம் ஆட்சியில் இருக்க முடியாது. விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டி ஏற்படும். ஆனால் அவரை வீட்டுக்கு அனுப்ப நாம் விரும்பவில்லை. எனவே அவதானமாகச் செயற்படுமாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இந்தியாவில் டெசோ போன்ற மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டாம் என இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம். இந்தியா இலங்கை விடயத்தில் தலையிடக்கூடாது. இலங்கை விடயங்களில் இந்தியா தலையிட இலங்கை ஒன்றும் இந்தியாவின் மாநிலம் அல்ல. இறைமையுடைய தனி நாடு.
மேற்குலக நாடுகள் இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்து ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி அவரை யுத்தக்குற்ற நீதிமன்றில் ஆஜர்படுத்த முனைகின்றன.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலம் தமிழர்களுக்கான ஈழத்தை அமைத்துக் கொடுக்க மேற்குலக நாடுகள் வழிவகுத்துக் கொடுப்பதாக குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ததேகூ தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரின் உருவ பொம்மைகளை ´புலி´, ´வெட்கமில்லையா´ என்று திட்டி செருப்பால் அடித்தனர். அதன் பின்னர் அதற்கு தீ மூட்டினர். அதன் காட்சிகளை காணொளியில் காண்க...



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !