Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » க. பொ. த. உ- பரீட்சைக்கு 2 இலட்சத்து 77452 பேர் தோற்றவுள்ளனர் :ஜகத் புஷ்பகுமார

க. பொ. த. உ- பரீட்சைக்கு 2 இலட்சத்து 77452 பேர் தோற்றவுள்ளனர் :ஜகத் புஷ்பகுமார

Written By sakara on Wednesday, August 1, 2012 | 7:37:00 PM

  எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 77 ஆயிரத்து 452 பேர் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.

இவர்களுள் கடந்தவருடம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 355 பேருக்கு இவ்வருடம் மீண்டும் பரீட்சைக்கு தோற்ற அனுமதியளிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

2011 இல் க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களது இசட் புள்ளிகள் மிக அண்மையில் வெளிவந்த நிலையில் அம்மாணவர்கள் இவ்வருடமும் பரீட்சைக்குத் தோற்ற விரும்பினால் அதற்கென விண்ணப்பிப்பதற்காக நாம் கால அவகாசம் வழங்கியிருந்தோம். அதற்கேற்ப எமக்கு 355 விண்ணபப்ப படிவங்கள் கிடைத்திருந்தன.

அம்மாணவர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளோமெனவும் அவர் கூறினார். இப் பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 535 பங்குபற்றவுள்ளனர். தனிப்பட்ட பரீட்சார்த்திகளுள் 15 ஆயிரத்து 239 பேர் புதிய பாடதிட்டத்துக்கு அமையவும் 41 ஆயிரத்து 323 பேர் பழைய பாட திட்டத்துக்கமையவும் பரீட்சை எழுதவிருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

மேலும் வடக்கு- கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் 2093 நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன. அத்துடன் 289 இணைப்பு நிலையங்களுக்கூடாக பரீட்சைகள் கண்காணிக்கப் படுவதுடன் சுமார் 12 ஆயிரத்து 500 வரையிலான ஆசிரியர்கள் கண்காணிப்பாளராக ஈடுபடுத்தப்படுவரெனவும் தெரிவித்தார்.

பரீட்சை ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுவரென சுட்டிக்காட்டிய ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார புனர்வாழ்வுபெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்கள் மாகாண மட்ட பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிப்பதன் மூலம் பரீட்சைக்கு தோற்ற முடியுமெனவும் குறிப்பிட்டார் .

குறித்த பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பித்து ஆகஸ்ட் 30ஆம் திகதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
___
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya