Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்: சின்னம், பாடல் அணிகளின் பெயர்கள் வெளியீடு(பட இணைப்பு)

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்: சின்னம், பாடல் அணிகளின் பெயர்கள் வெளியீடு(பட இணைப்பு)

Written By sakara on Wednesday, July 18, 2012 | 11:54:00 AM


இலங்கையில் முதன் முதலாக மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் சுற்றுப் போட்டியை முன்னிட்டு நேற்று ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான உத்தியோகபூர்வ சின்னமும் பாத்தியா, சந்தோஷ் இசையிலான பாடலும் வெளியிடப்பட்டன.

கொழும்பு சினமன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இலங்கை கிரிக்கெட் சபையினால் ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான உத்தியோகபூர்வ சின்னம், அணிகளின் பெயர் மற்றும் சின்னம், பாடல் ஆகியன வெளியிடப்பட்டன.


7 மாகாண அணிகளுக்கான உரிமையாண்மையை ஏலத்தில் விட்டு 4.33 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற சராசரி விலைப்பெறுமதியில் ஒவ்வோர் அணியும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


நகர அடிப்படையில் கழகங்களை அமைத்து மட்டுப்படுத்திக் கொள்வதை விடுத்து பரந்த பிரதேசங்களை உள்ளடக்கி, பாரிய எண்ணிக்கையில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு மாகாண மட்டத்திலான அணிகளை அமைப்பதற்கு இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாகாண அணியிலும் 18 வீரர்கள் அடிப்படையில் 12 பேர் இலங்கை வீரர்களாகவும் (21 வயதுக்குட்பட்டோர்) 6 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருப்பர். மற்றும் 7 மாகாண அணிகள் ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளதுடன் ஒவ்வொரு மாகாண அணியிலும் நட்சத்திர வீரர் என்ற அடிப்படையில் அவர்களின் பெயர்களும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் முதலாவது பருவகாலப் போட்டிக்கான அணிகளில் அடங்கியுள்ள வீரர்களின் பெயர்களும் நேற்று பரிந்துரைக்கப்பட்டது.


விளையாட்டு அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு இலங்கையில் கிரிக்கட் சம்பந்தமான விவகாரங்களைப் கையாண்டு வரும் உச்ச அதிகார அமைப்பான ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையின் ஆதரவுடன் இப்போட்டியின் முதலாவது பருவகாலச் சுற்றுப் போட்டிகள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று கொழும்பில் ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இதன் அழகுக் காட்சிகள் கண்டி பள்ளேகல சர்வதேச கிரிக்கட் அரங்கில் இடம்பெறவுள்ளன. இப்போட்டிக்கான அறிமுகத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆரம்ப நிகழ்வு ஆகஸ்ட் 10 திகதி மாலை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் விமரிசையாக இடம்பெறவுள்ளதுடன், இதற்கு முன்னாள் மற்றும் நடப்பு அணியிலுள்ள கிரிக்கட் வீரர்கள், ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.


இச்சுற்றுப் போட்டியானது சர்வதேச அளவில் ஒளிபரப்பப்பட்டு உலகிலுள்ள அனைத்து மக்களும் கண்டுகளிக்கவுள்ளதால் கிரிக்கட் ஆட்டத்தில் உலகில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை சிறப்பான இனங்காணல் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்பது திண்ணமாகும். இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

உலகின் பிரபலமான வீரர்களுடன் இணைந்து விளையாடுவதன் மூலமாக தமது திறமைகளைப் பட்டைதீட்டி, தேசிய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் உள்ளதாகவும் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அணியின் பெயரும் நட்டசத்திர வீரர்களின் பெயரும் பின்வருமாறு,

பஸ்னாஹிர (மேல்) மாகாணம் : டில்சான்
கந்துரட்ட (மத்திய) மாகாணம் : சங்கக்கார
நெகனஹிர (கிழக்கு) மாகாணம் : மெத்தியூஸ்
ருகுணு (தென்) மாகாணம் : மாலிங்க
உத்துர (வட) மாகாணம் : முரளிதரன்
ஊவா (தென்கிழக்கு) மாகாணம் : கெயில்
வயம்ப (வடமேல்) மாகாணம் : ஜயவர்தன

   

 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya