இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனக் கூறிய அந்த வட்டாரங்கள், பிரித்தானியாவிலிருந்து டுபாய் ஊடாக பிரித்தானிய கணவருடன் இவர் இலங்கைக்கு வந்ததாகவும் கூறியுள்ளன. இவரின் பெயர் கறுப்புப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இவர் தடுத்துவைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
இலங்கையின் வடபகுதிக்கு யுத்த காலத்திலும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்களில் இவர்கள் இருவரும் இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக புலனாய்வாளர்களின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தை கடுமையான விமர்சிக்கும் மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காகவே இக்கணவனும் மனைவியும் இலங்கைக்கு வந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பிறந்த இவர்;, சனல் - 4 இன் பணிப்பாளர்களில் ஒருவரான ஸ்ருவார்ட் கொஸ்குறோவை திருமணம் செய்துள்ளார். இலங்கைக்கு எதிராக புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் இவர் பிரதான பங்கேற்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக கூறப்படும் சிராணி சபாரட்னத்தின் கணவரான ஸ்ருவார்ட் கொஸ்குறோவை பொலிஸார் தேடி வருகின்றனர்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !