இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு திட்டமிட்ட படி மட்டக்களப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்.'"மாநாடு நடைபெறவுள்ள மட்டக்களப்பு. அரசடியிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நேற்று(24/05/2012) மாலை தீப்பிடித்ததால் இந்த மண்டபத்தின் திரை சீலை மற்றும் மின் விசிறி ஆகியன எரிந்துள்ளன. இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
எனினும், திட்டமிட்ட படி இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெறும்" என்றார்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !