நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று தம்புள்ளை நகரிற்குச் சென்று பள்ளிவாயலைப் பார்வையிட்டதோடு அங்குள்ள நிலைமைகளையும் அவதானித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் காணி அமைச்சருமான அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனையும் தம்புள்ளை பிரதேச செயலாளர் லக்ஷ்மி ஹேவாவிதாரனவையும் தம்புள்ளையிலுள்ள அமைச்சர் தென்னக்கோனின் வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பில் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், தம்புள்ளை பிரதேச செயலாளர் திருமதி லக்ஸ்மி ஹேவாவிதாரன, பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் பள்ளி தாக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் தென்னக்கோன் தனது அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டார்.
பின்னர் அமைச்சர் ஹக்கீம் பள்ளிவாயலுக்குச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு அங்குள்ள பொது மக்களையும் பள்ளி நிர்வாகிகளையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது அப்பிரதேச சிங்கள மக்கள் தம்புள்ளை மாநகர சபை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர், மாத்தளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், உதவிப் பொலிஸ் அத்தியட்சர,; குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சர் பொது மக்களுடன் கலந்துரையாடும் போது சிங்கள கடும்போக்கு வாதிகள்(தம்புள்ள ரஜமஹா விகாரை பிக்குகள்) சொல்வதைப் போன்று இது சட்டவிரோத கட்டடம் அல்ல எனவும் இதற்கான உறுதிப்பத்திரம், ஆவணங்கள் எங்களிடம் உள்ளன எனவும் முஸ்லிம் மக்கள் கூறியதுடன் அங்கு வந்திருந்த ஊர் சிங்களச் சகோதரர்கள் நாங்கள் இவர்களோடு இருக்கின்றோம். இது பழைமை வாய்ந்த பள்ளி. இந்த அசம்பாவிதங்களைச் செய்தவர்கள் இந்த ரஜமஹா விகாரைப் பிக்குகள் எனக் கூறி தமது அதிருப்தியையும் முன்வைத்தனர். அமைச்சர் பள்ளியிலிருந்து வெளியே வருகையில் அங்கு வெளியே நின்று கொண்டிருந்த தமிழ்ப்; பெண்மணிகள், எங்களுக்கும் எங்களுடைய இருப்பிடத்திற்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இதற்கு நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
_



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !