Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளின் பின்னும் வடக்கு மக்கள் உள பிரச்சினையில்

யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளின் பின்னும் வடக்கு மக்கள் உள பிரச்சினையில்

Written By sakara on Saturday, April 14, 2012 | 2:14:00 PM

யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளின் பின்னும் வடக்கு மக்கள் உள பிரச்சினையில்வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தமது அமைப்பு கைவிட்டது என்ற குற்றச்சாட்டை எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு (எம்.எஸ்.எப்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மறுத்துள்ளது. 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆலோசனை வழங்கும் பணிகளை எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு மேற்கொண்டு வந்தது. 

இந்த நிறுவனம் கடந்த 5ம் திகதி வடக்கிற்கான தமது சேவையை இடைநிறுத்திக் கொண்டது. வடக்கில் யுத்தத்தினால் உள நிலை பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படவில்லை எனவும், நீண்ட கால அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. 

எனவே, நீண்ட கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்களை வழங்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு கிடையாது என எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு அறிவித்துள்ளது. 

இதன் காரணமாகவே இதுவரை காலமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வந்த உளநல ஆலோசனை சேவையை இடைநிறுத்தியதாகவும், இது யுத்த வலய பாதிக்கப்பட்ட மக்களை கைவிடுவதாக அர்த்தப்படாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் ஆயிரக் கணக்கான மக்கள் உளசார் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதனை மறுப்பதற்கில்லை என எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

அவசரமாக உதவி தேவைப்படும் மற்றுமொரு பிரதேசத்திற்கு தமது வளங்களை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya