ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் தென்னிந்திய அணு உலைகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் இதுதொடர்பாக புகார் அளிக்க இருப்பதாகவும் இலங்கை தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இலங்கையின் எம்.பி. ஒருவர் தற்போது திடீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இலங்கையில் உள்ள காற்றாலை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சீனர்கள் இந்தியாவின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாக திடுக்கிடும் தகவலை கூறினார்.
மேலும் சீனாவால் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு உலைக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் இந்த எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு கூடங்குளத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இலங்கையிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து விளைவிக்க வெறும் 3 வினாடிகளே போதும் என்றும் கூறியுள்ளார்.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை இலங்கையின் எந்த எம்பி தெரிவித்திருப்பார் என நாம் ஆராய்ந்து பார்த்தபோதும் அதனை சரியாக அறியமுடியவில்லை.
எனினும் தற்போது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் சென்றுள்ளனர்.
ஒருவேளை, இந்த கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வெளியிட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது
.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !