
பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட இச்செயமலர்வை மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் 600 பேருக்கு இதுவரையில் புதிய மென்பொருள்களை நிர்மாணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மைக்ரொசொப்ட் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி சிறியான் டி சில்வா விஜேரத்ன தெரிவித்தார்.
´விண்டோஸ் 8 ஊடாக புதிய மென்பொருள்களை உற்பத்தி செய்வதற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 600 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உலக சந்தையில் 60 மில்லியனுக்கும் அதிகமான மென்பொருள்கள் விண்டோஸ் 8 மூலம் பாவனையாளர்களது கரங்களை சென்றடைந்துள்ளன. விண்டோஸ் 8 மூலம் எமது இளைஞர் யுவதிகள் நிர்மாணிக்கும் புதிய மென்பொருள்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு வருமானத்தையும் ஈட்டிக்கொடுக்கும். இலங்கை தகவல்தொழில்நுட்ப துறையில் தற்போது பாரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நாம் காண்கின்றோம்´ என குறிப்பிட்டார்.
உள்ளுரில் அப்ளிகேஷன்களை தயாரிப்பவர்களை ஊக்குவிப்பதும் அவர்களை அறிவுசார் ரீதியாக முன்னேற்றுவதும் மைக்ரோசொப்ட் டி.பி.ஈ பணிப்பாளர் வெலிங்டன் பெரேராவின் முக்கிய பணியாகும். கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் இத்தகைய புதிய அப்ளிகேஷன் உற்பத்தியாளர்கள் 600பேரை மைக்ரோசொப்ட் நிறுவனம் பயிற்றுவித்துள்ளது.
இச்செயமலர்வில் மைக்ரோசொப்ட ஸ்ரீலங்காவின் பங்குதரார்களான ஏசர், டெல்,எச்.பி, சிங்கர் மற்றும் சொப்ட்லொஜிக் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் தமது நிறுவனங்களில் விண்டோஸ்8 உற்பத்திகளை காட்சிப்படுத்தினர். விண்டோஸ் 8 மூலம் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வர்களிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் ழுநுஆ பணிப்பாளர் பூஜித்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அத்துடன் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு, செயற்றிரன், வேகமான தகவல் தொழில்நுட்ப சூழல் ஆகியவற்றை விண்டோஸ் 8 இலகுவாக ஏற்படுத்தி கொடுப்பதால் விண்டோஸ்8 இற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !