ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தாருக்காக தாம் இளநீர்
பறித்துக்கொடுக்கும் வேலையை செய்துள்ளதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர்
மேர்வின் சில்வா தெரிவித்துள்hளர்.
மேர்வின் சில்வாவின் தந்தை எனது தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவின் தேர்தல்
பிரச்சாரங்களுக்கு உதவி வழங்கினார், இன்று மேர்வின் சில்வா எமக்கு உதவிகளை
வழங்கி வருகின்றார் என சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மேர்வின் சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
சபாநாயகர் இள வயதாக இருந்த காலத்தில் ஒர் நாள் தாம் ராஜபக்ஷ வளவிற்கு
சென்றதாகவும், அதன் போது சமால் ராஜபக்ஷ, இளநீர் பறித்துக் கொடுக்குமாறு
தம்மிடம் கோரியதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
உடனே தாமும் நண்பர்களும் இணைந்து இளநீர் பறித்துக் கொடுத்ததாகக்
குறிப்பிட்டுள்ளார். அன்று இளநீர் பறித்த தாம் அமைச்சராகவும், இளநீர்
பறிக்கச் சொன்ன சமால் ராஜபக்ஷ இன்று சபாநாயகராகவும் பதவி வகிப்பதாகத்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !